தமிழ்நாடு

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

webteam

வாடகை பாக்கித் தொகையை வழங்கக்கோரியும், புதிய வாடகை ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஆவின் நிறுவனங்களுக்கு தினசரி எடுத்துச் செல்லப்படும் 30 லட்சம் லிட்டர் பால் தேக்கமடையும் சூழல் உருவாகி உள்ளது. ஆவின் பால் ஒப்பந்த டேங்கரி லாரி உரிமையாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. அப்போது ஆவின் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால், அதை புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆவின் நிறுவனம் செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய பொறுப்பாளர் சுப்பிரமணி, “தமிழகத்தில் உள்ள 10 ஆவின் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. 2016-18 ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. அத்துடன் கடந்த 10-ம் தேதி புதிய ஒப்பந்த டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் அதனை இறுதி செய்யாமல் அரசு கிடப்பில் வைத்துள்ளது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் கடந்த 5 மாதங்களாக ஆவின் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி வரும் 16ம் தேதி காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.