கவிஞர் வைரமுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதிக்குள் வைரமுத்து நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தரப்பில் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வைரமுத்து தரப்பிலிருந்து பதில் ஏதும் இல்லாததால், தற்போது ஆண்டோள் கோயிலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரப்போராட்டம் தொடர்ந்து வருகிறது.