தமிழ்நாடு

குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் !

குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் !

webteam

கிருஷ்ணகிரி அருகே ஆதார் அட்டை உட்பட முக்கிய ஆவணங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நேதாஜி சாலையில் உள்ள குப்பை தொட்டியில் மூன்று மூட்டைகளில் ஆதார் அட்டை உட்பட முக்கியமான ஆவணவங்கள் இருப்பதை துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்தனர். கடந்த 2015-16 ஆம் ஆண்டில் அகசிபள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கனகமுட்லு தபால் நிலையத்திற்கு உரிய தபால்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்காமல் உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஆதார் அட்டைகள், அறிவிப்பு கடிதங்கள், வங்கி தகவல்கள் என பல தபால்கள் மற்றும் நகை ஏல அறிவிப்பு தபால்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பை உணராமல் குப்பையில் வீசிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.