தமிழ்நாடு

“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி

“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி

webteam

பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை முகப்பேறு 4 வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவர், பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். 

இந்நிலையில், நேற்றிரவு முரளிதரன் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், முரளிதரன் அறையை சோதனை செய்த போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுந்தி வைத்திருந்த உருக்கமாக டைரியை கண்டுபிடித்தனர். அதில் “எதிர்கால எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்தால் அதை சமாளிக்க தன்னிடம் போதிய கல்வியோ வேலையோ இல்லை. தற்போது இருக்கும் வறுமையை போக்க இந்த வேலைக்கு போனால் தீராது. எனது குடும்பத்தினர் என்னை மன்னிக்க வேண்டும். மரணத்தின் வலி எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.