தமிழ்நாடு

கோவை குற்றாலத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

கோவை குற்றாலத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

கனமழை காரணமாக கோவையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறு, குளம் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. இதனால் கோவை
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 9ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிக்க தடை
விதிக்கப்பட்டிருந்தது. மழை அளவு குறைந்ததை அடுத்து, கடந்த 21ஆம் தேதி முதல் மீண்டும் கோவை குற்றாலத்தில் குளிக்க
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே
அங்கிருந்தவர்கள் அவரை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அந்த இளைஞர் அதற்குள் உயிரிழந்தார். தகவலிறிந்த வனத்துறை
மற்றும் காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருவியில் தண்ணீர் மிகவும்
குளிர்ச்சியாக இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும், அருவியில் போதுமான
மருத்துவ சிகிச்சை இல்லையென்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.