அவனியாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பூனை ஒன்று கடித்துள்ளது. இதை அவர் கண்டுங்காணாமல் விட்ட நிலையில், காயம் பெரிதாகி ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், தனி சிகிச்சைப் பிரிவில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தொற்றால் கடும் வேதனைக்குள்ளாகிவந்த இளைஞர், உயிரை மாய்த்துக்கொண்டார். முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கேட்போரை நடுங்கச் செய்துள்ளது.