தமிழ்நாடு

சிறிய ரயில், பஸ், லாரி போன்ற வாகனங்களை அச்சு அசலாக செய்து அசத்தும் கூடலூர் இளைஞர்

சிறிய ரயில், பஸ், லாரி போன்ற வாகனங்களை அச்சு அசலாக செய்து அசத்தும் கூடலூர் இளைஞர்

kaleelrahman

கூடலூரை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர் சிறிய அளவிலான ரயில், பேருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களை வடிவமைத்து அசத்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வசிப்பவர் பிரவீன் குமார். கூடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இந்த இளைஞர் தனது சிறுவயது முதலே சிறிய அளவிலான வாகனங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது ஆர்வம் மற்றும் திறமை காரணமாக தனது வீட்டில் சிறிய அளவிலான ரயில், லாரி, பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். குறிப்பாக இவர் உருவாக்கியுள்ள ரயில் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு ரயிலை நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை நமக்கு தருகிறது. ரயில் போலவே இவர் உருவாக்கியுள்ள மற்ற வாகனங்களும் தத்துரூபமாக உள்ளது. உள்ளூர் மக்கள் இவரது திறமையை கண்டு நேரில் பாராட்டி வருகின்றனர்.