தமிழ்நாடு

90அடி ஆழக் கிணற்றில் சிக்கித் தவித்த பெண் - மீட்பு வீடியோ

90அடி ஆழக் கிணற்றில் சிக்கித் தவித்த பெண் - மீட்பு வீடியோ

webteam

கோபிசெட்டிபாளையம் அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஏறமுடியாமல் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னை தீயணைப்புத்துறையினர் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் அடுத்த சில்லாமடை கிராமத்தில் வசித்து வருபவர் அமராவதி (35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 90 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் இறங்கி அமர்ந்துள்ளார். அவர் மேலே ஏறிவருவதற்கு படிகள் இல்லாததினால் கிணற்றிலேயே அமர்ந்துள்ளார். இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக விரைந்த வந்த தீயணைப்புப்படையினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஏற முடியாமல் தவித்த அமராவதியை  4 மணி நேர போராட்டத்துக்குப்பின் கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். சாலையின் அருகில் உள்ள அந்தக் கிணற்றில் யாரும் இறங்குவதற்கு படிகள் இல்லாத போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எப்படி கிணற்றில் இறங்கினார் என்று அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 90 அடி ஆழக்கிணறில் இறங்கி அமர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அக்கிணற்றுக்கு அருகே ஆரம்பப்பள்ளி இருப்பதால் அக்கிணற்றை இரும்பு கம்பிகளால் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.