திருச்சியில் பத்தாண்டுகளாக குழந்தையின்றி இருந்த தம்பதியினருக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு பகுதியான அத்திக்குளம் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் பாண்டியன், கோகிலாராணி. பாண்டியன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். எம்.ஏ., எம்.எட். பட்டதாரியான கோகிலாரணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். இந்த தம்பதியினர் திருமணம் முடிந்து 9 ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையில் இருந்த நிலையில், கோகிலராணி கருவுற்றார்.
நேற்று மாலை மகப்பேறுக்காக திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகிலாராணிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக பிறந்துள்ள நிலையில், ஒரு குழந்தை மட்டும் குறைவான எடையுடன் இருந்தது. அந்த குழந்தை தற்போது சிசு தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தாயும், மூன்று குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளாக குழந்தையின்றி இருந்த தம்பதியினருக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்துள்ள சம்பவம் தம்பதியினர் மட்டுமின்றி உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read Also -> அழுத குழந்தையை தூக்கிய பெண் - கடத்தலா? கதறிய தாய்