தமிழ்நாடு

பாதுகாப்பின்றி கிடக்கும் இரயில் நிலைய கிணறு - மூடக்கோரி மக்கள் கோரிக்கை

webteam

திருத்துறைப்பூண்டி அருகே பழமையான கிணறு மூடப்படாமல் இருப்பதால் அதனை முறையாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்து முத்துபேட்டை இரயில் நிலையம் உள்ளது. அங்கு முந்தைய காலத்தில் நீராவி என்ஜினில் நீர் நிரப்புவதற்கு தோண்டப்பட்ட பழமையான கிணறு மூடப்படாமல் பராமரிப்பின்றி இருக்கிறது. 200அடிக்கும் மேல் உள்ள அந்தக் கிணறு சரிவர மூடப்படாமல் இருப்பதால் ஆடு, மாடுகள் தவறி விழுந்து உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளது. 

ஆழ்துளைக் கிணறுகளில் சுர்ஜித் தவறி விழுந்த சம்பவம் தற்போது அனைவரும் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்கள் பகுதியிலுள்ள பழமையான கிணற்றையும் மூட வேண்டும் என முத்துப்பேட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் ஆடு, மாடு அல்லது இரவு நேரங்களில் யாரேனும் தவறி விழும் நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.