மாட்டுத்தாவணி  முகநூல்
தமிழ்நாடு

கான்கிரீட் நுழைவுவாயிலை அகற்றியபோது ஏற்பட்ட பயங்கர விபத்து... உயிரிழந்த ஓட்டுநர்!

மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே இருந்த நக்கீரன் நுழைவுவாயில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது.

PT WEB

மதுரை மாட்டுத்தாவணியில் கான்கிரீட் நுழைவுவாயிலை அகற்றியபோது, அதன் தூண் இடிந்து விழுந்த விபத்தில் ஜேபிசி ஓட்டுநர் உயிரிழந்தார்.

மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே இருந்த நக்கீரன் நுழைவுவாயில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதெனக் கூறி அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்றிரவு அதனை, இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக நுழைவுவாயிலின் கான்கிரீட் தூண் இடிந்து, ஜேசிபி இயந்திரத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஜேசிபி ஓட்டுநர் நாகலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒப்பந்த தாரரான நல்லதம்பி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.