சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதியதலைமுறை
தமிழ்நாடு

புயல் கரையை கடக்கும் இடத்தில் மறுபடியும் மாற்றம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் கொடுத்த தகவல்!

புயல் கரையைக் கடக்கும் இடம் மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

PT WEB

கடந்த சில தினங்களாக புயலைப்பற்றிய எச்சரிக்கை தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தாலும், புயலானது தற்காலிக புயலாகதான் உருமாறி இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக்கூடும் என்று மீண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக உருவாகி மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இருப்பினும் புயல் கரையைக் கடக்கும் இடம் மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி (விழுப்புரத்தின் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்) இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரம் நமக்கு தெரிவித்தார்.