தமிழ்நாடு

கடலூர்: கிணற்றில் பேரனுக்கு நீச்சல் பழக்கிய பாட்டி - சேலை அவிழ்ந்ததால் நேர்ந்த விபரீதம்

கடலூர்: கிணற்றில் பேரனுக்கு நீச்சல் பழக்கிய பாட்டி - சேலை அவிழ்ந்ததால் நேர்ந்த விபரீதம்

kaleelrahman

கடலூரில் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்த சிறுவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ராஜசேகர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவனை அவனது பாட்டி வெள்ளையம்மாள் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக கிராமத்தின் அருகில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ராஜசேகரின் இடுப்பில் தனது சேலையை கட்டி கிணற்றில் நீச்சலடிக்க வைத்துள்ளார். நீச்சல் பழகி கொண்டிருந்த சிறுவனின் இடுப்பில் கட்டியிருந்த சேலையின் சுருக்கு திடீரென அவிழ்ந்து கொண்டதால் மாணவன் ராஜசேகர் கிணற்றில் மூழ்கி இறந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ராஜசேகர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்,