தமிழ்நாடு

ஒரு மாணவியின் ஆலோசனை: வீட்டில் என்ன செய்யலாம்?

ஒரு மாணவியின் ஆலோசனை: வீட்டில் என்ன செய்யலாம்?

webteam

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். விடுமுறை என்றாலே குஷிதான் என்று சொல்லும் குழந்தைகள், மாணவர்கள் கூட வெளியே வர இயலாததால், டிவியோடும், ஸ்மார்ட் போன்களுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர். இதில் பிளஸ் டூ தேர்வை எழுதிவிட்டு இருக்கும் மாணவர்களின் நிலைமை இன்னும் மோசம். தேர்வுகளை எழுதிவிட்டு விடுமுறையை பயணங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் கழிக்கலாம் என்ற அவர்களின் திட்டம் தற்போது தவிடு பொடியாகிவிட்டது. இவர்களுக்கு வீட்டிலேருந்தே, இந்த நாட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று டிப்ஸ தருகிறார் சென்னை மாணவி மு.சினேகதுர்கா.

 
“ உங்களது நிலைமை எனக்கு புரிகிறது. ஆனால் நமக்கு வேறு வழியில்லை. வீட்டிலுள்ள இந்த நாட்களில் நாம் ஒவியம் வரையலாம், பாட்டுப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். விடுகதை, புதிர்கள் போட்டு விளையாடலாம். இணையத்தைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி படித்து அறிவை மேம்படுத்தலாம். பூக்கட்டுதல், துணி தைத்தல், தோட்டக்கலைகள், மெஹந்தி டிசைன்கள் போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் திறன்களையும் கற்றுக்கொள்ளலாம்.


ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த சாப்ட்ஸ் கில்ஸ், புதிய மொழிகள், அனிமேஷன் போன்றவற்றை கற்கலாம். உலக வரைபடத்தை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அந்தந்த நாடுகளின் பாரம்பரியம், கலாசாரம், மொழி, கலை, இலக்கியம், சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். புதிய கம்ப்யூட்டர் மென்பொருள் மொழிகளை இணையதளம் வழியாக படிக்க முயற்சிகளைத் தொடங்கலாம்.

வீட்டை அலங்கரித்தல், கோலம் போடுதல், தையல் கலை கற்றல், ரங்கோலி, சமையல் கலை கற்றல், வீட்டில் சமையல் வேலைகளில் உதவி செய்தல், வீட்டில் துணி துவைத்தல், காயப்போடுதல் போன்ற பணிகளைச் செய்து  பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை பிள்ளைகளும் பெரியவர்களும் செய்யலாம். வெகுநாட்களாக வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பொருட்களை மீண்டும்  தூய்மைப்படுத்தி வரிசைப்படுத்தலாம்.

'கொரோனா நெகட்டிவ் எந்நேரத்திலும் பாசிட்டிவ் ஆகலாம்'-பீலா ராஜேஷ் தகவல் !
புத்தகங்களையும் கூட அட்டவணைப்படுத்தலாம். குடும்பத்தினருடன் சேர்ந்து கதைகளையும், முன்னோர்கள் பற்றியும் உறவினர்கள் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழலாம். ஆன்லைன் கேம்ஸ், ஆன்லைன் வணிகம், ஆன்லைன் படிப்புகள் என இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் களஞ்சியங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இருந்த இடத்திலிருந்தே புகைப்படம், வீடியோ எடுக்கலாம். தெரியாதவர்கள் பயிற்சி எடுக்கலாம், கார், பைக், மிதிவண்டி போன்ற வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தலாம்.


பொழுதுபோகவில்லை என்றால், பழைய புகைப்படங்களைப் பார்த்து, அதன் பின்புலம் பற்றிப் பேசி மகிழலாம்.  அந்தக்கால கருப்பு வெள்ளை திரைப்படங்களை, வாய்ப்பிருந்தால் உலகின் சிறந்த படங்களைக் கண்டு மகிழலாம். குழந்தைகளுடன் சேர்ந்து கார்ட்டூன் படங்களையும்  கண்டு மகிழலாம்.  ஆர்வமிருந்தால், யு டியூப் சேனல் தொடங்கி தங்களுடைய தனிப்பட்ட திறன்களை(சமையல், இலக்கியம், கலை) பதிவு செய்யலாம். விடுமுறை நாட்களை வெறுமென கழிப்பதை விட்டுவிட்டு அதை நினைவுகூறத்தக்க அனுபவமாக மாற்ற முயற்சியுங்கள்.” எனக் கூறுகிறார் மாணவி.