விருதுநகரில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக கடைக்காரர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று வழங்கி வருகிறார்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கௌதம். தான் படித்த படிப்பிற்கு ஏற்ற பணி ஏதும் கிடைக்காததால் விருதுநகரில் வடைக் கடையை தொடங்கியுள்ளார்.
இதற்கு 'பெட்ரமாக்ஸ் வடைக் கடை' என பெயர் சூட்டிய இளைஞர் கௌதம் வடை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வழங்குவதாக கெளதம் தெரிவித்துள்ளார். இளைஞரின் நல்நோக்கத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.