தமிழ்நாடு

மதுரை வந்தார் பிரதமர் மோடி

மதுரை வந்தார் பிரதமர் மோடி

webteam

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு வைக்க பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன், இல. கணேசன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் மலர் கொத்து குடுத்து வரவேற்றனர். இதனைதொடர்ந்து  எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி சாலை மார்கமாக சென்றார்.