சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி. தொகுதி மக்கள் நிறைய கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்'' என்றார். அமைச்சரவையில் உங்களுக்கு இடம் உண்டா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , மே 7-ம் தேதி தெரிந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.