தமிழ்நாடு

சென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை

சென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை

webteam

சென்னையில் ஒன்றாக மது அருந்தியவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

சென்னை மாநகராட்சி, திருவிக நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த 14ஆம் தேதி வீட்டின் அருகே மயக்கமான நிலையில் படுகாயத்துடன் கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவிக நகர் காவல்துறையினர், படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த விக்னேஷிடம் விசாரித்தனர். 

அந்த விசாரணையில், தனது நண்பர்கள் அமானுல்லா, முபாரக், ராஜவேல் ஆகியோருடன் கடந்த 13ஆம் தேதி ஒன்றாக மது அருந்தியதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமானுல்லா மற்றும் 2 பேர் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து அமானுல்லா, முபாரக், ராஜ்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை கொலை வழக்காக திருவிக நகர் காவல்துறையினர் பதிவு செய்தனர்.