தமிழ்நாடு

நோயாளி அரசு மருத்துவமனையில் தூக்கி வீசப்பட்ட அவலம்

webteam

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாததால், நோயாளி ஒருவர் ‌கார் நிறுத்தும் இடத்தில் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. 

நாகர்கோவிலை சேர்ந்த சீனிவாசன் ‌என்பவருக்கு ‌விபத்து ஏற்பட்டு நடக்க ‌முடியாத நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவரை, உறவினர்கள் கைவிட்ட நிலையில், மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் ‌கார் பார்க்கிங் இடத்தில் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு நாட்களாக கொட்டும் மழையிலும் சீனிவாசன் திறந்த வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார். அந்த வழியே செல்லும் மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகள் சீனிவாசனை பார்த்து சென்றும் உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதோ போன்று சில மாதங்களுக்கு முன்பு கம்பம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் வெளியே வீசியதாக புகார் எழுந்த நி்லையில், இது போன்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.