தமிழ்நாடு

இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம்!

இடிந்து விழுந்தது சென்னை சில்க்ஸ் கட்டிடம்!

webteam

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

சென்னை தி. நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 மாடிக் கட்டிடமும் நாசமானது. இதையடுத்து அதை இடிக்கும் பணிகள் அங்கு நடந்து வந்தது. ஜா கட்டர் என்ற எந்திரத்தை பயன்படுத்தி அதை இடித்து வந்தனர். இதன் காரணமாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். பின்னர், இது 50 மீட்டர் சுற்றளவாகக் குறைக்கப்பட்டது. கட்டட இடிப்பு வேலைகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்பட்டு வந்தது.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் கிரேன் இயக்குபவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இடிப்புப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை, கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. விழுந்ததும் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

‘கட்டட இடிப்பு பணிகள் இன்றோடு முடிந்துவிடும்’ என்று சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியின் ஒப்பந்ததாரர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.