தமிழ்நாடு

மதுரை: கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

மதுரை: கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

JustinDurai

மதுரை அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

கீழ குயில்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார மையம் பயன்பாட்டிற்கு வராத நிலையில், அங்குள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அதில் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை ஜானுஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.