தென் தமிழகம் மற்றும் மத்திய ஆந்திராபகுதிகளில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணத்தால்,தமிழகம், புதுச்சேரியில் மழைநீடிக்கிறது.
இந்நிலையில், வடகிழக்குவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக சென்னைவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு, லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம்,நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.