தமிழ்நாடு

தாயே மகளை கொன்ற கொடூரம்

தாயே மகளை கொன்ற கொடூரம்

webteam

குளித்தலை அருகே தாய் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்தவர் ரம்யா (24). இவருக்கும் கொளக்குடியை சேர்ந்த தங்கத்துரை என்பவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருவரும் கொளக்குடியில் விவசாயக்கூலி வேளை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்தச் சூழலில் திருமண முடிந்த ஓராண்டிற்கு பிறகு ரம்யா தன் கணவருடன் அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தன் குழந்தை வேதவர்சினியுடன்(3) தாய் வீடான பரளியில் வசித்து வந்தார்.  இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டை பூட்டிக்கொண்டு தன் மகள் வேதவர்சினியை காலால் மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குளித்தலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர் வீட்டின் கதவை  திறந்து பார்த்தபோது குழந்தை வேதவர்சினி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.  தாய் ரம்யா ஓராமாக அமர்ந்திருந்துள்ளார். 

குழந்தையை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். பின் ரம்யாவை கைது செய்த காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.