திருப்பூரில் காரில் பயணித்தவருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அபராதம் விதித்து காவல்துறை சார்பாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் என்.ஆர்.கே புரம் பகுதியை செல்வகுமார். இவருக்கு நேற்று மதியம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவரது காரின் எண் குறிப்பிடப்பட்டு, இந்த வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியை கண்டு செல்வகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர துணை கமிஷனரிடம் கேட்ட போது, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதேபோல் சிலநாட்களுக்கு முன்பு சென்னையில், காரில் சென்ற பெண்ணுக்கு, 'ஹெல்மெட்' அணியாதது ஏன்; அபராதம் செலுத்த வேண்டும்' என, போக்குவரத்து போலீசார், குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறிப்பிடத்தக்கது.