உலக அமைதியை வலியுறுத்தி கோவையை சேர்ந்த மதன் என்பவர் 8500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் மதன் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இருசக்கர வாகன பிரியரான இவர், உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 28 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார்.
கோவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா, டெல்லி, மணாலி, ரோத்தாங் பாஸ், லடாக், வழியாக, காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியாவின் அபாய பகுதியான கார்துங்லா சென்று இன்று ஊர் திரும்பி உள்ளார்.
மொத்தம் 20 நாட்கள் பயணம் மேற்கொண்ட இவர் , சுமார் 8500 மீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை திரும்பிய மதனை, ‘பிக் பாஸ்’ அனந்த வைத்யநாதன் வரவேற்று பாராட்டு தெரிவித்தார்.
தனது பயணம் குறித்து பேசுகையில் ஒரு நாளைக்கு 500 கி.மீ வரை பயணம் செய்யததாகவும்,பல்வேறு கரடு முரடான சாலைகளில் உயிருக்கு ஆபத்தான சாலைகளில் இருசக்கர வாகனம் மூலமாக சென்று வந்துள்ளாதாகவும் தெரிவித்தார். உலக சமாதான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் பொருத்தி இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறினார்.
இந்தப் பயணத்தின் போது இந்தியாவில் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும் தெரிந்து கொண்டதாக கூறினார். குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்கள் பலரையும் சந்தித்ததாகவும், அடுத்த முறை குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்காக பணியாற்ற போவதாகவும் கூறினார்.