ஆறு மாத ஆண் குழந்தையை முள்காட்டிற்குள் வீசிச் சென்ற கொடூர சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகனூரில் செயல்பாட்டில் இல்லாத நிலையில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. அதனருகே உள்ள முள்காட்டில் பிறந்து ஆறு மாதமே ஆன ஆண் குழந்தையின் கை, கால்களை நாய்கள் தின்றுகொண்டிருப்பதை அவ்வழியேச் சென்றவர்கள் கண்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பினர். இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, குழந்தையை வீசிச் சென்றவர் குறித்து விசாரித்து வருகின்றனர். மருத்துவ சோதனையில் அது ஆண்குழந்தை என்பதும், பிறந்து ஆறுமாத காலம் மட்டுமே ஆகியுள்ளதும் தெரியவந்துள்ளது.