தமிழ்நாடு

மழையால் சுவர் இடிந்து சிறுவன் பலி

மழையால் சுவர் இடிந்து சிறுவன் பலி

webteam

சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் மழையினால் பாதிப்படைந்த சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் 3 வயது மகன் கார்த்திக். சுரேஷ் வீட்டின் சுற்றுப்புற சுவர் ஹாலோ பிளாக்கால் கட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையினால், சுற்றுப்புற சுவர் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் கார்த்திக் வீட்டு சுற்று சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென சுவர் இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளத்தூர் காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மழையினால் சுவர் இடிந்து சிறுவன் பலியான சம்பவம் பெற்றோருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.