தமிழ்நாடு

உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த தலைவர் எலிசபெத் - கமல்ஹாசன் புகழாரம்

webteam

உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த தலைவர்களில் ஒருவர் எலிசபெத் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்றிரவு காலமான நிலையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் படப்பிடிப்புக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வருகை தந்ததை நினைவுகூர்ந்த கமல்ஹாசன் அவரது இறப்பிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மறைந்த மகாராணி எலிசபெத்தை உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்தவர் என்று புகழ்ந்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காலனி ஆதிக்க மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் பிரதிநிதி மகாராணி எலிசபெத் என்று கூறினார். மேலும் உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்தவர் எலிசபெத் என்று கூறியவர், புதிய உலகு படைப்போம் என்ற எண்ணத்தில் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.