தமிழக அரசின் கிளை அச்சகத்தில் நவீன அச்சு இயந்திரத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கிவைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் கிளை அச்சகம் உள்ளது. இதற்கு அரசால் வழங்கப்பட்ட நவீன அச்சு இயந்திரத்தை முதலமைச்சர் முன்னிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகள் கொண்ட அச்சு இயந்திரம் தமிழக அரசின் கிளை அச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், அதன்மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தேவையான ஆவணங்கள், வழக்கு பட்டியல்களை விரைவாக அச்சிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.