கன்னியாகுமரியில் உள்ள புதூர் பகுதியை சேர்ந்த தேவசகாயம் என்பவரை கரடி தாக்கியதால் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தேவசகாயம். கூலி தொழிலாளியான இவருக்கு பொய்கை அணை பகுதியில் முந்திரி தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று இவர் முந்திரி பழம் பறிப்பதற்காக இவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அந்த வேளையில் அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று, அவரை கடுமையாக தாக்கியது.
இதில் அவருக்கு கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கரடியிடம் இருந்து தப்பிக்க போராடிய நிலையில் கூச்சல் போட்டுள்ளார். இதனை தொடந்து அக்கம்பக்க தோப்புகளில் இருந்து வந்தவர்கள் கரடியை விரட்டினர். இதனை தொடர்ந்த் காயம் அடைந்த தேவசகாயத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.