அணில் குட்டியுடன் எட்வின்
அணில் குட்டியுடன் எட்வின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

’சின்ன சின்ன அன்பில் தானே’ : உயிர் கொடுத்தவருக்கு உற்ற தோழனாய் மாறிய அணில்!

PT WEB

நாய்கள், பூனைகள் மட்டுமல்ல... அணிலும் அன்பு செலுத்தினால் மனிதனுக்கு விசுவாசமான பிராணியாக மாறிவிடும் என்பதற்கு கன்னியாகுமரி அருகே ஒரு நிகழ்வு உதாரணமாக உள்ளது.

தக்கலை அருகே பேக்கரி நடத்திவரும் எட்வின் என்பவர் ஒரு மாதத்திற்குமுன்பு விபத்தில் சிக்கிய அணிலை காப்பாற்றியுள்ளார். பின் தனது கடைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்து ஒரு சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதற்கு பால், பழம் ஆகியவற்றை கொடுத்து பராமரித்துள்ளார். உடல்நலம் தேறிய அணில் குட்டியை எட்வின் வெளியே விட்டுவிட்டார்.

ஆனால் அணிலோ அவரைவிட்டு பிரிய மனமில்லாமல் அவரது கடைக்குள்ளே வந்து அடைக்கலம் புகுந்ததோடு அங்கேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளது. எட்வின் கொடுக்கும் தின்பண்டங்களை அணில் ருசித்து சாப்பிடுகிறது.

எட்வினின் முதுகிலும் தலையிலும் கைகளிலும் ஏறி அன்புமழை பொழிகிறது அணில். உயிர் கொடுத்தவருக்கு உற்ற தோழனாய் மாறி பாசமாய் விளையாடும் காட்சிகளை அந்தப் பகுதி பொதுமக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.