தமிழ்நாடு

போலி இமெயில் மூலம் பண மோசடி... அலர்ட் ஆன வேலூர் ஆட்சியர்

webteam

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.. அண்மையில் அவரது பெயரைப் பயன்படுத்தி இ மெயில் ஐடியில் இருந்து வேலூரில் பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆங்கிலத்தில் ஒரு தகவல் வந்தது. அதில் "எனக்கு எதாவது உதவி செய்யமுடியுமா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். இதுபோன்ற தகவலை யாருக்கும் அனுப்பவில்லை. அது போலியான இமெயில் ஐடி என ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். மேலும், இந்த மோசடி தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் ஆட்சியர் சண்முகசுந்தரம் புகார் அளித்துள்ளார். அடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சைபர் முறைகேடு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய ஆட்சியர் சண்முகசுந்தரம், "அண்மைக் காலமாக மாவட்ட ஆட்சியர்கள் ஒருசிலர் பெயரில் போலி இ மெயில் ஐ.டி. துவங்கி முறைகேடுகளில் ஈடுபட்டவருகின்றனர். மற்ற அதிகாரிகள், பெரிய நிறுவனங்களுக்கு "எனக்கு எதாவது உதவி செய்ய முடியுமா" என தகவல் அனுப்பி தவறான வழிமுறையைப் பின்பற்றிவருகின்றனர். என் இமெயில் ஐ.டியில் இருந்து இதுபோன்ற தகவல்கள் வந்தால் யாரும் அதற்குப் பதில் அளிக்கவேண்டாம் என்றும். இது குறித்து தனது வாட்ஸ் ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்" என்று குறிப்பிட்டார்.