தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டாண்டு காலமாக இருளர் இன மக்கள் கொண்டாடும் விழா! காரணம் இதுதான்!

Sinekadhara

மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடற்கரையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இருளர் சமூக மக்கள் ஒன்று திரள்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதற்கும் ஜெய்பீம் படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

அண்மையில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த சித்தரிப்பின் நிஜ களம் இதுதான். ஆண்டாண்டுகாலமாக மாமல்லபுரம் கடற்கரையில் இந்த விழா நடந்து வருகிறது. மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடும் இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மன், மாசிமகம் முழு நிலவு நாளில் கடற்கரையில் அருள்பாலிப்பதாக நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையின்படி, மாமல்லபுரம் கடற்கரைக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே வந்து சடங்குகளை செய்து, திறந்தவெளியில் குடில்கள் அமைத்து குடும்பத்துடன் சமைத்து உண்டு மகிழ்வர். இந்த ஆண்டும் விழாவை இருளர் மக்கள் தங்கள் வழக்கப்படி கொண்டாடினர். இந்த விழாநாளில் திருமண நிச்சயங்கள், திருமண விழாக்களையும் நடத்தி மகிழ்ந்தனர்.

இருளர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் இந்த விழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் மாமல்லபுரம் வந்திருந்ததால் கடற்கரையே களைகட்டியிருந்தது.