தமிழ்நாடு

”சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

”சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

webteam

கர்நாடக அணைகளிலிருந்து காவேரி ஆற்றில் நீர் திறப்பு தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல்லுக்கு வருவதை சுற்றுலாப்பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. 

இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து நீர்வரத்து அதிகரித்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.