சென்னையில் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நடுவீதியில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணத்தை கொண்டு வந்த கண்டெய்னர் லாரி, சென்னை அமைந்தகரை பகுதியில் திடீர் பழுது காரணமாக நின்றது. நேற்றிரவு அந்த கண்டெயினர் லாரி பழுதாகி நின்ற நிலையில் அதை சரி செய்ய மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டனர். காவல் துறையினர் உதவியுடன் நள்ளிரவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. பழுது நீக்கப்பட்ட பின்னர், அந்த லாரி புறப்பட்டுச் சென்றது. அந்த கண்டெய்னர் லாரியில் ரிசர்வ் வங்கியின் ரூ.2 ஆயிரம் கோடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.