தமிழ்நாடு

ஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.15 ஆயிரம் - காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்த நபர்

ஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.15 ஆயிரம் - காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்த நபர்

webteam

திருநெல்வேலியில் ஏடிஎல்-ல் யாரோ தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை காவல்நிலையத்தில் கொடுத்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருநெல்வேலி துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “திருநெல்வேலியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்த போது நனைந்து கொண்டே வந்து என்னை ஒருவர் பார்க்க வந்தார். உங்கள் புகாரை கொடுங்கள் என்றபோது, அவர் வண்ணாரப்பேட்டை எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றபோது அவருக்கு முன்னால் பணம் எடுத்து சென்றிருந்த யாரோ ரூ.15 ஆயிரத்தை எடுக்காமல் சென்றுவிட்டதாக கூறினார். 

அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி என்னிடம் அளித்தார். உங்களிடம் கொடுத்தால் கட்டாயம் சிசிடிவியை பார்த்து உரியவர்களிடம் ஒப்படைப்பீர்கள் என்பதால் என்னிடம் கொடுக்க வந்ததாக தெரிவித்தார். ஒரு சிறு நிறுவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றி வரும் முத்துக்குமாரின் நேர்மையை பாராட்டினேன். ஜன்னலுக்கு வெளியே பெய்த மழை எனக்கென்னவோ முத்துக்குமாருக்காக பெய்தது போல தெரிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.