திருவள்ளூரில் நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மில்டன் (17) என்கிற அப்பு. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இறந்து விட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மில்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மில்டனின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மில்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பன் இறந்தது முதல் மில்டன் வருத்தத்தில் இருந்து வந்ததாகவும், நண்பனின் இறப்பை ஏற்றுகொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன்பு மில்டன் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
இந்த நிலையில் தான் மில்டன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
******
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)