மதுரை மாரத்தான் போட்டி PT
தமிழ்நாடு

மதுரை: குருதி கொடை விழிப்புணர்வுக்காக மாரத்தானில் பங்கேற்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாராத்தான் போட்டியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vengaiyan R

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் "உதிரம் 2023" என்ற தலைப்பில் குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த 10 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் கலந்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் தினேஷ் போட்டியில் பங்கேற்றபின் கழிவறைக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த தினேஷுடன் மாராத்தான் போட்டியில் கலந்துகொண்ட அவரது நண்பர்கள் தினேஷின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.