தமிழ்நாடு

குதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

குதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

webteam

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றித்திரியும் குதிரைகளை அடையாளம் காண்பதற்காக அவற்றிற்கு சிப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய பகுதிகளில் மாடுகள், குதிரைகள் சுற்றித்திரிந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுநல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த, முதற்கட்டமாக நகரில் சுற்றி திரியும் குதிரைகளுக்கு சர்வதேச கால்நடை சேவை அமைப்பு சிப் பொருத்த முடிவெடுத்து அந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதில் பிரத்யேக எண்ணைக் கொண்ட அந்த சிப்பானது குதிரையின் கழுத்துப் பகுதியில் ஊசி மூலம் பொருத்தப்படுகிறது. அந்த எண்ணில் குதிரையின் பாலினம், அங்க அடையாளங்கள், உரிமையாளர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் பதிவு செய்யப்படும். ரிட்டர் என்ற கருவியைக் கொண்டு குதிரையின் கழுத்தை ஸ்கேன் செய்தால் அதன் முழு விவரம் தெரியவரும் என சர்வதேச கால்நடை சேவை அமைப்பின் இயக்குநர் இலியானா ஆட்டர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குதிரைகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு இவற்றின் நடமாட்டதை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.