இருசக்கர வாகனத்தில் தன் கணவருடன் சென்ற பெண்னை கீழே தள்ளி, அவரிடம் 10 சவரன் நகையை பறித்து சென்ற வழிப்பறி திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மேட்டுதெருவில் ஒருவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் வேறு வண்டிகள் எதுவும் அப்போது செல்லவில்லை. இதை நோட்டிமிட்ட இரண்டு மர்ம நபர்கள் , அந்த தம்பதியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர். தங்களை யாரோ சிலர் பின்தொடர்வதை பார்த்ததும், யாரேனும் வழிப்போக்கர்களாக இருப்பார்கள் என அப்பெண்ணின் கணவர் நினைத்துள்ளார்.
அப்போது தம்பதியினரிடம் இருசக்கர வாகனத்தினருக்கு அருகாமையில் வந்த அந்த நபர்கள், அப்பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்பெண் சட்டென தடுமாற, அந்தக் கும்பல் சங்கிலியை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை கீழே தள்ளியது. மனைவி கீழே விழுந்ததை பார்த்தவுடன், கணவர் அந்த இரண்டு நபர்களையும் விரட்டிக்கொண்டு ஓடினார். ஆனால் அந்தக் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர, உடனே விஷ்னுகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர், விசாரணை மேற்கொண்டனர். அந்த தம்பதியினர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் குற்றவாளிகள் தொடர்பான அடையாளங்களை பெற்ற காவல்துறையினர், தப்பிச்சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் செல்லும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.