சென்னை விமான நிலையம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, தாம்பரத்தில் இருந்து வந்த கார் விமானநிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை உடனடியாக சுதாரித்து கொண்ட கார் ஓட்டுநர், காரில் இருந்தவர்களை உடனே இறங்குமாறு சொல்லியுள்ளார். அவர்களுடம் வேகமாக இறங்கிவிட, பின்னர் ஓட்டுநரும் இறங்கியுள்ளார்.
அதற்குள் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. வேகமாக பரவிய தீ, காரை சுற்றி பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரில் பயணித்தவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.