தமிழ்நாடு

மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு

மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு

webteam

சென்னை விமான நிலைய மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார் தீடீரென தீப்பற்றி எரிந்தது.

சேலத்தில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு, விமான நிலைய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது. உடனடியாக காரில் இருந்த நான்கு பேரும் கீழே இறங்கியுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையம் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரை சுந்தர மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.