தமிழ்நாடு

120 கிலோ எடையில் பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை - கும்பகோணத்தில் வடிவமைப்பு

JustinDurai

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் தயாராகி வரும் சிலையை, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க போவதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.