தமிழ்நாடு

தொற்றிலிருந்து மீண்ட 92 வயது முதியவர் -சால்வை அணிவித்து வீட்டிற்கு அனுப்பிய மருத்துவர்

தொற்றிலிருந்து மீண்ட 92 வயது முதியவர் -சால்வை அணிவித்து வீட்டிற்கு அனுப்பிய மருத்துவர்

webteam

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 92 வயது முதியவரை மருத்துவர்கள் சால்வை அணிவித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

 சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு வயது 92. கடந்த 19 ஆம் தேதியன்று இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்த கணேஷுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில், மருத்துவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி கூறி திரும்பினார்.