ஆவடி பெண் உயிரிழப்பு PT
தமிழ்நாடு

ஆவடியில் காய்ச்சல் பாதிப்பால் 46 வயது பெண் உயிரிழப்பு! நோய்த்தடுப்பு பணிகள் தீவிரம்!

ஆவடியில் காய்ச்சல் பாதிப்பால் 46 வயது பெண் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

ஆவடி மாநகராட்சி பகுதியில் வசித்து வந்துள்ள கலையரசி (46 வயது) என்பவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்துள்ள இவர், இன்று உயிரிழந்துள்ளார். நடுத்தர வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து ஆவடி மாநகராட்சி பகுதியில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.