செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ஆம் தேர்வெழுதச் சென்ற மாணவி, பேருந்துக்காக காத்திருந்துள்ளார். இந்நிலையில், திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த மாணவி, பேருந்தை பின் தொடர்ந்து ஓடியச் சென்று ஏறியுள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசனிடம் கேட்டபோது... வாணியம்பாடியில் இருந்து, ஆலங்காயம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜிடம், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.