சூரக்குடி மஞ்சுவிரட்டில் காளை முட்டி உயிரிழந்த 19 வயது இளைஞர் pt
தமிழ்நாடு

சூரக்குடி| மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க சென்ற 19 வயது இளைஞர்.. காளை முட்டி உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் நத்தத்தைச் சேர்ந்த 19 வயது சுஹரீஷ் என்ற இளைஞர் சுஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்..

PT WEB

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில், செகுட்டையனார் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் முதல் இளவட்ட மஞ்சுவிரட்டு பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செட்டியாகுளத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் சுஹரீஷ் (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சுஹரீஷ் திருப்பூரில் செயல்படும் நாட்டு மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு சொந்த வந்திருந்தபோது இளவட்ட மஞ்சுவிரட்டைக் காண பார்வையாளராக வந்தவர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளைஞர் சுஹரீஷ்சை காளை முட்டிய காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.