தமிழ்நாடு

பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு

பள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு

webteam

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து உயிரிழந்தார். 

கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா என்ற மாணவி, தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்புப் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு கடித்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வர்ஷாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விடுதியில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பாம்பு உள்ளே புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.