தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று 1,30,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 16,632, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 33 பேர் என 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 4,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,764 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஒரேநாளில் 98 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,826ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 51 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 15,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,06,033 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.