மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் அருகில் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர். இதேபோல தமிழகத்தின் பல இடங்களிலும் திமுக தொண்டர்கள், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர்.